கோவையில் யாருக்கு வெற்றி? பாஜகவுக்கு ஷாக் - வெளியான கருத்துக்கணிப்பு முடிவு!
கோவையில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நட்சத்திர தொகுதி
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர தொகுதியாக உள்ளது.
இந்நிலையில் பிரபல நியூஸ் நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி 31 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடிக்கும். பாஜக கூட்டணி 16 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடிக்கும்.
யாருக்கு வெற்றி?
நாம் தமிழர்கட்சிக்கு 4 சவீத வாக்குகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு 2 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மக்கள் அனைவருமே கோவை தொகுதியைதான் உற்று நோக்கி வருகின்றனர்.
இதற்கிடையில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தக்க இரட்டை இலக்கங்களை பெற வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.