தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து விவரம் - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அசையும் அசையா சொத்துக்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை
மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
ஓ பன்னீர்செல்வம் பாஜக ஆதரவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.இந்நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
சொத்து விவரம்
அதன்படி, அவரிடம் கையிருப்பு ரொக்கமாக 5.11 லட்சம் மற்றும் வங்கி இருப்பு தொகையாக 25,30,492, பங்குச் சந்தையில் 60 ஆயிரம் முதலீடு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹோண்டா சிட்டி கார், 1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 62.73 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அவரது மனைவி அகிலாவிடம் கையிருப்பு ரொக்கமாக 1.56 லட்சம், வங்கி இருப்பு தொகையாக 1,14,73,275, பங்குச் சந்தையில் 1,65,150 முதலீடு, சேமிப்புத் திட்ட முதலீடாக 68,130 ரூபாய், 20,48,000 மதிப்பிலான 320 கிராம் தங்க நகை, செலக்கரிச்சல் கிராமத்தில் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான 0.8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இவர்களது மகள் ஆராதனா பெயரில் 3,10,450 ரூபாய் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.