மயங்கி விழுந்த மாவட்ட தலைவர்; ரோட்டிலேயே சாப்பிட்ட அண்ணாமலை - யாத்திரையில் பரபரப்பு!

BJP K. Annamalai Tiruppur
By Sumathi Oct 20, 2023 07:42 AM GMT
Report

மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 நடைபயணம் 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கி தற்போது திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பாஜக நிர்வாகிகள்

அதன்படி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அதில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பரபரப்பு

அப்போது, கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

யாத்திரையில் உரை

அதன்பின், சோமனூர் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை உரையாற்றினார். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்தி அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் இரவு உணவை சாப்பிட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் பரவி வருகிறது.