திமுக மனைவியை விற்று பிழைப்பவர்கள்.. போட்டிபோட்டு ஆபாச பேச்சு - விளாசிய அண்ணாமலை!
செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை திமுக குறித்து பேசியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சென்னை, தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜகவின் பெருங்கோட்டப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, "பெண்களை அவமதிக்கும் வகையில் நிதிஷ் குமார் பேசியதற்கு கனிமொழியும், தமிழக முதலமைச்சரும் ஏன் கருத்து கூறவில்லை என ஆச்சரியமாக உள்ளது.
கருத்து தெரிவித்தால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை நீக்கி விடுவார்கள் என்பதில் அமைதியாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி உருவான பிறகு திமுகவின் ஆபாச பேச்சு அதில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் பரவிவிட்டது , போட்டிபோட்டு பேசுகின்றனர். சுய நலத்திற்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்".
விளாசிய அண்ணாமலை
இதனை தொடர்ந்து, "முத்துராமலிங்க தேவர் , வைத்தியநாத ஐயர் சிலைகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமியை நம்புபவர்கள்தான் கோயிலுக்கு செல்வார்கள் , 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில் முன்பாக பெரியார் சிலை வைப்போம் என்று கூறினார்களா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழி , வந்த பின்பு ஒரு வழி என்று திமுகவினர் செயல்படுகின்றனர்.
உலகில் சனாதனம் குறித்து பல பத்தாயிரம் புத்தகம் உள்ளது , ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட , ஒரு பேராசிரியர் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உதயநிதி கருத்து கூறியுள்ளார்.
திமுகவினர் மனைவியை விற்று பிழைப்பவர்கள் என பெரியார் கூறியதை திமுக அலுவலகம் முன்பு கொண்டு சென்று வைக்கலாமா?" என்று காட்டத்துடன் பேசியுள்ளார்.