இந்தியாவில் அதிகமாக ஆணுறை பயன்படுத்தும் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் ஆணுறை பயன்படுத்தும் விகிதம் குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆணுறை
உலக சுகாதார நிறுவனம் (WHO) மக்களுக்கும் ,சுகாதாரத் துறையினருக்கும் ஆணுறை பயன்பாடு குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய குடும்ப சுகாதாரத் துறை (2021-22) இது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக, உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆணுறை இல்லாமல் இந்தியாவில் அதிக அளவில் உடலுறவு வைத்துக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த ஆய்வு அறிக்கையில், எந்தெந்த மாநிலங்களில் ஆணுறைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்,'' இந்தியாவில் குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ள தாதா நகர் ஹவேலி பகுதி மக்கள் அதிகமான ஆணுறைகளை வாங்குவதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
முதலிடம்
இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதைத் தொடர்ந்து ஆந்திர மக்கள் ஆணுறைகளை அதிக அளவில் வாங்குகின்றனர்.
பஞ்சாபில் ,சண்டிகர் ,ஹரியானா இமாச்சல் ராஜஸ்தான் ,குஜராத் , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 10,000பேரில் 1000க்கும் குறைவான மக்கள் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 33.07 கோடி ஆணுறைகள் வாங்கப்படுகின்றன. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை இங்கு ஆண்டுக்கு 5.3 கோடி ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகம். 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உ.பி.யின் மக்கள் தொகை 22 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.