பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயரே இல்லை..இதுதான் அர்த்தம் - நிர்மலா சீதாராமன் பதில்!
பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் இல்லை என்றால் என்ன அர்த்தம் என்பதை நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு துரோகம்
மத்திய பட்ஜெட்டில், பிகார், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
நிதியமைச்சர் விளக்கம்
மேலும், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.
பழைய வரி விதிப்பு முறையை நீக்குவது குறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது. வரி விதிப்பை எளிமையாக்குவதே நோக்கம்.
நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் நோக்கத்துடன் வரி வலையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.