நிர்மலா சீதாராமனின் இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது - என்ன தெரியுமா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு தாக்கல் செய்தார்.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கி தொடர்ச்சியாக 1.40 மணி வரை வாசித்தார். இந்தியாவில் இதுதான் நீண்ட நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். இதன்மூலம் மிக நீண்ட பட்ஜெட் உரையை வாசித்ததற்கான சாதனையை படைத்துள்ளார்.
சாதனை
2022 ஆம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் 1.5 மணி நேரத்திலேயே பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அதே வேளையில் குறைந்த பட்ஜெட் உரை வாசிப்பு என்ற சாதனையும் நிர்மலா சீதாராமனாலே படைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வார்த்தைகளை பயன்படுத்திய நிதி அமைச்சர் என்ற பெருமை மன்மோகன் சிங்கையே சாரும். 1991 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அவர் 18,650 வார்த்தைகளை பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.