பழைய ஸ்கூட்டர் தான்.. வீட்டுக் கடன் வேறு - நிர்மலா சீதாராமனின் சொத்து விவரம்!

Smt Nirmala Sitharaman
By Sumathi Apr 01, 2024 07:30 AM GMT
Report

நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில், “பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் என்னை போட்டியிட வைக்க விரும்பினார். ஆனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டேன்.

nirmala sitharaman

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை" எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. 2022ல் அவர் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாக்கல் செய்த சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5500 கோடி கோவில் சொத்து.. நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம் - ஸ்டாலின் காட்டம்!

ரூ.5500 கோடி கோவில் சொத்து.. நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம் - ஸ்டாலின் காட்டம்!

 சொத்து மதிப்பு

அதன்படி, ஹைதராபாத் அருகே நிர்மலா சீதாராமனின் கணவர் பரகாலா பிரபாகருக்கு ரூ.1.7 கோடி மதிப்பில் சொந்தமான வீடு உள்ளது. நிர்மலாவுக்கு குன்ட்லூர் கிராமத்தில் ரூ.17.08 லட்ச மதிப்புள்ள சொந்த நிலம், ரூ.19.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3.98 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொரூட்கள்,

பழைய ஸ்கூட்டர் தான்.. வீட்டுக் கடன் வேறு - நிர்மலா சீதாராமனின் சொத்து விவரம்! | Nirmala Sitharaman S Net Worth Details

ரூ.28,200-க்கு வாங்கப்பட்ட பழைய ஸ்கூட்டர், வங்கிக் கணக்குகளில் ரூ.35.52 லட்சம், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் ரூ.5.8 லட்சம், பிபிஎப் திட்டத்தில் ரூ.1.6 லட்சம், கையிருப்பில் ரூ.7,350 ரொக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நிர்மலா சீதாராமனும் அவரது கணவரும் இணைந்து 19 ஆண்டுகள் கால அவகாசத்தில் பெறப்பட்ட வீட்டுக் கடன் கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.5.44 லட்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ரூ.1.87 கோடி அசையா சொத்துகள். ரூ.65.55 லட்சம் அசையும் சொத்துகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.