பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம் நிர்மலா சீதாராமன்? இப்போ.. நிதித்துறை தாண்டி இன்னொரு பவர்!
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை மட்டுமின்றி மற்றொரு துறையும் வழங்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவுதான் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், எம்பி நிர்மலா சீதாராமன் இந்த முறையும் தேர்தலை சந்திக்காமல் அமைச்சராகி உள்ளார். தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்படவுள்ளது.
கூடுதல் பொறுப்பு
இதற்கிடையில், நிர்மலா சீதாராமனின் ஜிஎஸ்டி கொள்கைகள் பாஜக தோற்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் போன்றவை கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இருப்பினும், அவருக்கு நிதித்துறையை தாண்டி கார்ப்பரேட் விவகாரத்துறையும் வழங்கபப்ட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்டார்ட் அப், கார்ப்ரேட் நிறுவனங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பார் எனப் பார்க்கப்படுகிறது.