3-வது முறை ஆட்சி வந்தால்...இது தான்..! நிர்மலா சீதாராமன் உறுதி..!
தனியார் பத்திரிகைக்கு நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் குறித்தும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டம் குறித்தும் விவரித்து பேசினார்.
நிர்மலா சீதாராமன் பேட்டி
அப்போது அவர், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் என நாட்டின் நான்கு தூண்களை உள்ளடக்கி, 2047 க்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலைப்பாட்டை அடைய முன்னுரிமைகள் வழங்கப்பட்டள்ளதாக தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக மோடியின் அரசு வென்றால், எதனை மக்கள் எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி கூறியதை போல, நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் நிலையை அடைய தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்றார்.
மேலும், வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார். தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டிலேயே நாட்டின் வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகளாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டு, நாட்டிற்கு பெரிய, பெரிய வங்கிகள் தான் தேவை என்றும் SBI அளவிலான வங்கிகள் அதிகம் தேவை என்றும் தெரிவித்தார்.
நாட்டில் வேலையின்மை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டில் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் அதில் சந்தேகமே இல்லை என்றார்.
AI டெக்னாலஜிக்கும் மனித தலையீடு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டி, எப்போதும் AI தொழில்நுட்பம் தானாக இயங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.