இடைக்கால பட்ஜெட் 2024 - முன்னாள் பிரதமரின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்!

Smt Nirmala Sitharaman BJP India
By Jiyath Feb 01, 2024 04:01 AM GMT
Report

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இடைக்கால பட்ஜெட் 

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இடைக்கால பட்ஜெட் 2024 - முன்னாள் பிரதமரின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்! | Interim Budget Nirmala Sitharaman Presented

இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் நிர்மலா சீதாராமன்.

மொரார்ஜி தேசாய்

இந்திய நிதி அமைச்சர்களில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நிதியமைச்சராக பதவி வகித்தபோது, 10 பட்ஜெட்கள் மொத்தமாக தாக்கல் செய்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் 2024 - முன்னாள் பிரதமரின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்! | Interim Budget Nirmala Sitharaman Presented

அதில் 1959–1964 வரை 5 முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என 6 பட்ஜெட்களை அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்துள்ளார்.