ஸ்டார்பக்ஸ்-க்கு வந்த சோதனை.. பணி நீக்கம் செய்ததால் ஆத்திரத்தில் ஊழியர் வெளியிட்ட ரகசியம்!
பணி நீக்கம் செய்ததால் ஊழியர் செய்த காரியம் இணையத்தில் பரவி வருகிறது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனம்
1971-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜெர்ரி பால்ட்வின், செவ் சிகிள், கார்டன் போக்கர் என்ற சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் இணைந்து ஸ்டார்பக்ஸ் என்ற காபி ஷாப் ஒன்றை சியாட்டில் உள்ள பைக் பிளேஸ் என்ற இடத்தில் தொடங்கினர்.
தற்பொழுது இங்கு கோல்டு காபி, ஷேக் இன்னும் பல பானங்களுக்கு பெயர் பெற்றது. உலகம் முழுவதிலும் சுமார் 25,000-க்கும் அதிகமான கிளைகள் உள்ளது.
ஊழியர் நீக்கம்
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், ஸ்டார்பக்ஸின் சீக்ரெட் டிரிங்க் ரெசிப்பீஸை இணையத்தில் லீக் செய்துள்ளது பெரும் சர்ச்சையானது. விசாரணையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு லீக் செய்ததாக கூறப்படுகிறது.
இப்போது கசியவிடப்பட்ட ரெசிப்பிகள் ஸ்டார்பக்ஸின் பிரியமான டிரிங்குகளை தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள சிக்கலான செயல்முறை ஆகும். அவர் லீக் செய்த இந்த ரெசிப்பீஸ், ஸ்டார்பக்ஸ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் ஈர்ப்பையும் தூண்டியுள்ளன. அந்த ரெசிப்பீஸை பார்த்து நாமும் வீட்டிலேயே முயற்சி செய்யலாம் எனப் பலர் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.