எக்ஸ் தளம் இனி இலவசம் கிடையாது.. ஆண்டு கட்டணம் வசூலிக்க முடிவு - எலான் மஸ்க் அறிவிப்பு!
எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு ஆண்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ் தளம்
தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை பெற்றதும் அதில் அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். அதில் டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றினார். தற்பொழுது அந்த தளத்தில் வருவாய் அதிகரிக்கும் விதமாக பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார். அதில் தற்பொழுது எலான் மஸ்க் பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் நடைமுறையை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாகவும், அடிப்படை அம்சங்களுக்கு ஒரு டாலர் என்று ஆண்டு கட்டணம் வசூலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு கட்டணம்
இந்நிலையில், "நாட் எ பாட்" என அழைக்கப்படும் புதிய சந்தா திட்டத்தின்கீழ், வலைத்தள பதிப்பில் லைக்குகள், மறுபதிவுகள் அல்லது பிற கணக்குகளின் இடுகைகள் மற்றும் புக்மார்க்கிங் இடுகைகளுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் நாட்டிற்கு நாடு மாறுபடும், முதலில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த சோதனையில் முன்னதால் இருக்கும் பயனர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த ஆண்டு கட்டணம் செலுத்துவதற்கு சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத புதிய பயனர்கள், போஸ்ட்களை பார்க்கவும் படிக்கவும், வீடியோக்களை பார்க்கவும் மற்றும் கணக்குகளை பின்தொடரவும் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளனர்.