தமிழ்நாட்டுக்குள் சிஏஏ சட்டத்தை விடமாட்டோம் என்று கூற ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை!
சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம் என்று கூற மு.க.ஸ்டாலினிக்கு அதிகாரம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டம்
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “ குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. இந்த சட்டத்தை வேறு யாரும் தடுக்க முடியாது. மக்களைக் குழப்பி திசைதிருப்புவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எது தவறென்று மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் சி.ஏ.ஏ என்னெவென்றே தெரியாமல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பிறப்பதன் மூலாகவும், வழித்தோன்றல் மூலமாகவும் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. இதில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையில் மூன்று முறை திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அண்ணாமலை
வழித்தோன்றல் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையில் இரண்டு முறை திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனவே, இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லில் எழுதப்பட்ட விதி கிடையாது. அகதிகளுக்கான ஐ.நா-வின் Convention and refugee 1951, 1967 சட்டங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை.
அதன்படி, இந்தியாவுக்குள் அகதிகளாக வருபவருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. Principle of Non Refoulement என்கிற சட்டத்தை நாம் பின்பற்றுகிறோம். அதன்படி, இந்தியாவுக்கு வரும் அகதிகள் திருப்பியனுப்பப்படமாட்டார்கள். ஆனால், பிரச்சினை முடிந்த பிறகு இங்கிருந்து செல்ல வேண்டும். முன்பிருந்த சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகள் அகதிகளாக இருந்தால், குடியுரிமை வழங்கப்படும் என்றிருந்தது.
தற்போது, 2019-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த இஸ்லாமியரல்லாத இந்து, பௌத்தம், சமணம், கிறித்தவம், பார்சி, சீக்கிய மதத்தவர்கள் 5 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே குடியுரிமை வழங்கப்படும். இதில், இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது. இலங்கை அகதிகள் விவகாரத்தில் Principle of Non Refoulement எல்லாம் சட்டம் பின்பற்றப்படுகிறது.
கண்டனம்!
குடியுரிமை கொடுத்தப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது. தற்போதைய சி.ஏ.ஏ சட்டத்திலிருக்கும் முக்கிய அம்சம், 8-வது அட்டவணையில் இருக்கும் 22 இந்திய மொழிகளில் ஒரு மொழி பேசவேண்டும்.
அப்படியிருக்க, தமிழ்நாட்டுக்குள் இந்தச் சட்டத்தை விடமாட்டோம் என்று கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது. மேலும், இந்தச் சட்டத்திலிருக்கும் நாடுகளும் இஸ்லாமிய நாடுகள். அதனால்தான், இஸ்லாமியர்கள் தவிர பிற மதத்தினருக்கு குடியுரிமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அந்த நாட்டின் சட்டங்கள் இஸ்லாமியரல்லாதவருக்கு எதிராக இருக்கிறது. இன்னொருபக்கம், இலங்கை சிங்கள நாடு என அறிவிக்கப்படவில்லை.
எனவே, இலங்கை தமிழர் விவகாரத்தில், அந்த நாட்டில் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால், பிரச்னை தீர்ந்துவிடும். அதற்கு இந்தியா தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.