CAA அமல் ஒருபுறம்; மறுபுறம் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து- பிரதமர் மோடி!
இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
2024 ஆம் ஆண்டின் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி, "அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
இந்தப் புனிதமான மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ரமலான் வாழ்த்து
சிஏஏ சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 4 ஆண்டுகள் கடந்து தற்போது சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும்,
Wishing everyone a blessed Ramzan. May this holy month bring joy, good health and prosperity in everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) March 11, 2024
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தச் சட்டமானது 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.