முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின் அதிரடி முடிவு!

M K Stalin Chennai K. Annamalai Edappadi K. Palaniswami
By Swetha Mar 14, 2024 07:45 AM GMT
Report

அவதூறு கருத்து கூறியதாக ஈபிஎஸ் மற்றும் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவதூறு கருத்து

போதைபொருள் கடத்தல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின் அதிரடி முடிவு! | Stalin Filed A Case Against Eps And Annamalai

அதேபோல், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா?

டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா?

வழக்கு பதிவு

இதனையடுத்து, முதல்வர் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின் அதிரடி முடிவு! | Stalin Filed A Case Against Eps And Annamalai

அந்த மனுவில், தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது