முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வரியில் விலக்கு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.
[NR35D
அதில்,கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகை, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அரசனை வெளியீடு
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் முன்னாள் படை வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் எனவும், வருமான வரி செலுத்துவோருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவினத்தை தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.