கூப்புட்டு கொடுத்த ராணுவம்....இந்திய ராணுவத்திற்கு ஆலோசகராகும் அஜித்
நடிகர் அஜித் குமார் ஆலோசகராக செயல்பட்டு வரும் ட்ரான்களை தயாரிக்கும் நிறுவனமான தக்ஷா குழுவிடம் ட்ரான்கள் செய்ய இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சினிமாவை தாண்டிய தேடுதல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையிலும், நடிகர் அஜித் தன்னுடைய வேறு ஆசைகளை நோக்கி செயல்பட்டு கொண்டே இருக்கின்றார். துப்பாக்கி சுடுதல் போட்டி, பைக் ரைட் செல்வது போன்ற பல செயல்களில் அவர் சினிமாவை தாண்டி ஈடுபட்டு வருகின்றார்.
அவர் அண்மையில், பைக் ரைட் கம்பெனி ஒன்றையும் துவங்கியுள்ளார். அஜித்தின் இது போன்ற செயல்கள் அவருக்கும் நற்பெயரை பெற்று கொடுக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக, அவருக்கு மற்றொரு புகழாரம் கிடைத்துள்ளது.
ட்ரோன் கம்பெனி
அஜித் அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள ட்ரானிகளை செய்யும் தக்ஷா குழுவுக்கு ஆலோசகராக இருந்து வருகின்றார். பல்வேறு சர்வதேச, தேசிய அளவிலான ட்ரான் போட்டிகளில் இந்த குழு பங்கெடுத்து நிறைய பரிசுகளை பெற்று வந்துள்ளது.
இந்த தக்ஷா குழு கொரோனா காலகட்டத்தின் போது, தமிழக அரசுடன் இணைந்தும் செயல்பட்டது. அதனை தொடர்நது கடந்த ஆண்டு மத்திய அரசிற்கும் ட்ரானிகளை தயாரிக்கும் பணியில் இந்த குழு ஈடுபட்டது.
ராணுவத்துடன் ஒப்பந்தம்
இந்நிலையில் தான் தற்போது, இந்த தக்ஷா குழுவை இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தக்ஷா குழு தயாரித்துக் கொடுக்க உள்ளது. இதற்காக ரூ.165 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.