டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா?

TATA M K Stalin Ranipet Tata Motors
By Swetha Mar 14, 2024 04:56 AM GMT
Report

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

டாடா குழுமம்

சென்னை, ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9,000 கோடி முதலீட்டில், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.

டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா? | Tata Motors Invest 9000 Crore Company In Ranipet

இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் டாடா குழுமம் இடையே கையெழுத்தானது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒருட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில் துறைபல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

பழைய ரூ.20 நோட் இருக்கா? அப்போ நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?

பழைய ரூ.20 நோட் இருக்கா? அப்போ நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?

ஸ்டாலின் ஒப்பந்தம்

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா? | Tata Motors Invest 9000 Crore Company In Ranipet

இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள முகம் அலுவலகத்தில் தமிழக அரசு மற்றும் டாடா நிறுவனம் இடையே ஒப்பந்த கையெழுத்து ஆனது. ஒப்பந்தத்தை தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழும தலைமை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் அருண் ராய், சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் டாடா குழும அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

எங்கே அமைகிறது?

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஆர்பி ராஜா, தமிழக வரலாற்றில் முதல்முறையாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் 2 மாத இடைவெளியில் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் தொழிற்சாலை நிறுவ வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. பிப்ரவரியில் அந்த தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

டாடா குழுமம்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் ஒப்பந்தம்! எங்கே அமைகிறது தெரியுமா? | Tata Motors Invest 9000 Crore Company In Ranipet

தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக டாடா நிறுவனத்தின் பசுமை வாகன உற்பத்தி ஆலையைரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில்அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடு்த்த சில மாதங்களில் டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த நிறுவனத்துக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடக்கம்தான், விரைவில் இன்னும் பல பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர உள்ளன.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் அரசின் சலுகைகளை எதிர்பார்த்து வருவது இல்லை. மாறாக, இங்குள்ள திறன்வாய்ந்த மனிதவளம், உகந்த சூழல் ஆகியவற்றுக்காகவே வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் திறன் பெற்ற மனித வளம் கிடைக்கிறது.

முதலீடுகளைவிட, பெரிய அளவிலானவேலைவாய்ப்பை நோக்கித்தான் அரசுசெயல்படுகிறது. கடந்த 2021 முதல் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நிறுவனங்கள் பணியைதொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.