பேரிழப்பு.. சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவு - முதல்வர் இரங்கல்!

Tamil nadu Death
By Vinothini Nov 21, 2023 10:10 AM GMT
Report

பிரபல கண் மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.எஸ். பத்ரிநாத்

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர், பிரபல விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் எஸ். எஸ். பத்ரிநாத். இவர் அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

stalin-condolences-on-the-death-of-dr-ss-badrinath

இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்மபூஷண்' விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் பெற்றவர். இவர் தற்பொழுது தனது 83 வயதில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு; 'நீ இல்லாத உலகத்திலே' பாடல் பாடி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

ஜெயலலிதாவிற்கு பாராட்டு; 'நீ இல்லாத உலகத்திலே' பாடல் பாடி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

இரங்கல்

இந்நிலையில், கண் மருத்துவர் எஸ். எஸ். பத்ரிநாத்தின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.

stalin-condolences-on-the-death-of-dr-ss-badrinath

சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் பத்ரிநாத் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம்.

எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்தின் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு. எஸ்.எஸ். பத்ரிநாத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது இரங்கலை தெரிவித்தார்.