பிரபல நடிகை பூனம் பாண்டேவை கடுமையாக தாக்கிய காதல் கணவர் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை பூனம் பாண்டேவை அவரது காதல் கணவர் சாம் பாம்பே கடுமையாக தாக்கியதில் அவரது தலை, கண், முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் பூனம் பாண்டே சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாம் பாம்பே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியில் பிரபலமான நடிகையாகவும், பிரபல மாடலாகவும் பூனம் பாண்டே வலம் வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளரும், நடிகருமான சாம் பாம்பேவை இவர் காதலித்து திருமணம் செய்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் தேனிலவுக்காக கோவா சென்றிருந்தனர்.
அப்போது, காதல் கணவர் தன்னை தாக்கியதாக பூனம் பாண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கோவா போலீசார் சாம் பாம்பேவை கைது செய்தனர்.
இனி நான் சாமி பாம்பேவுடன் வாழப்போவதில்லை. எனக்கும் அவருக்குமான காதல் முறிந்து போய்விட்டது என்று அப்போது அவர் கூறியிருந்தார். இதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த சாம் பாம்பே, பூனம் பாண்டேவுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தார். அதனால், ஒருவரை விரும்பி விட்டால் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை. பிரச்சனை உருவானது உண்மைதான்.
அதனால் போலீசில் புகார் அளித்தேன். ஆனாலும் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். மீண்டும் நாங்கள் சந்தோசமாக இருப்போம் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் தனது தலை, கண், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசில் பூனம் பண்டே புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, சாம் பாம்பேவை போலீசார் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.