ஜெயலலிதாவிற்கு பாராட்டு; 'நீ இல்லாத உலகத்திலே' பாடல் பாடி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

J Jayalalithaa M K Stalin Tamil nadu DMK Chennai
By Jiyath Nov 21, 2023 07:29 AM GMT
Report

திரைப்பட பாடகி பி. சுசீலாவின் "நீ இல்லாத உலகத்திலே" என்ற பாடலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பாடி அசத்தியுள்ளார்.

பட்டமளிப்பு விழா

ஜெயலலிதா இசை மற்றும் கவின் காலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு;

தமிழ்நாட்டில் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான். ஜெயலலிதா வேந்தராக தன்னையே நியமித்துக் கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதலமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா. முதலமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது.

மேடையில் பாடிய முதல்வர்

பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நமது சட்ட போராட்டத்திற்கு நமது சட்ட போராட்டத்திற்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்" என்று பேசினார்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு;

இதனையடுத்து இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். இதற்கிடையில் பி.சுசீலா பாடிய "நீ இல்லாத உலகத்திலே" என்ற பாடலை மு.ஸ்டாலின் மேடையில் பாடி அசத்தினார்.

இது குறித்து பி.சுசீலா பேசுகையில் "முதலமைச்சர் பாடியுள்ளது மிகப்பெரிய சாதனை நிகழ்வு. அவரது தந்தையை நினைத்து அவர் "நீ இல்லாத உலகத்திலே" என பாடியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.