ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

M K Stalin Chennai Reserve Bank of India
By Vinothini Nov 19, 2023 04:51 AM GMT
Report

முதல்வர் ஸ்டாலின் ரிசர்வ் பேங்க்கின் முன்னாள் கவர்னர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். n

முன்னாள் கவர்னர்

தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் தந்தையும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநருமான வெங்கிடரமணன், இவர் கேரளாவின் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

rbi ex governor venkitaramanan

பின்னர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை, ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார். தற்பொழுது இவர் மரணமடைந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.. நிராகரித்த 10 மசோதாக்கள்- சட்டசபையில் நிறைவேற்றம்!

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.. நிராகரித்த 10 மசோதாக்கள்- சட்டசபையில் நிறைவேற்றம்!

இரங்கல்

இந்நிலையில், இவரது இறப்பிற்கு பலரும் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின், "இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.