ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.. நிராகரித்த 10 மசோதாக்கள்- சட்டசபையில் நிறைவேற்றம்!

M K Stalin DMK R. N. Ravi
By Vinothini Nov 18, 2023 01:29 PM GMT
Report

ஆளுநர் நிராகரித்த மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றபட்டது.

சட்டசபை

கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

mk-stalin-about-governor-in-tn-assembly

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குட் நியூஸ்.. பொங்கலுக்கு வேட்டி, சேலை ஒப்படைப்பு, எப்போ வரும்? - அமைச்சர் தகவல்!

குட் நியூஸ்.. பொங்கலுக்கு வேட்டி, சேலை ஒப்படைப்பு, எப்போ வரும்? - அமைச்சர் தகவல்!

தீர்மானம்

இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தனர்.

mk-stalin-about-governor-in-tn-assembly

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.