உளவுத்துறை அலார்ட் - அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதுகாப்பு உளவுத்துறை அலெர்ட் செய்துள்ளதால், அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தமிழக பாஜகவின் துணை தலைவராக இருந்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவரானார். கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்க, புதியவர் அண்ணாமலைக்கு தலைவர் பதவி கொடுத்த விஷயம் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழக பாஜகவில் அவர் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.
பல சிக்கலான விஷயங்களையும் அவர் எளிதில் முடித்து விடுகிறார் என்று டெல்லி பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர். தமிழக அரசியலில் அவர் தீவிரமாக, துணிச்சலாக செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிர்ப்புகள் பெருக்கெடுத்து வருகிறது.
இதனால் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று உளவுத்துறையினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அதனால், அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு (சி.ஆர்.பி.எஃப்) அளிக்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.