ஸ்ரீமதியின் தாய் விக்கிரவாண்டியில் வேட்புமனு தாக்கல் - சொன்ன காரணம்!
ஸ்ரீமதியின் தாய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீமதி தாய்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 64 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் 26 ஆம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
நான் என்ன பாவம் பண்ணேன்..சிபிசிஐடி போலீசார் விசாரணை வேண்டாம் - டிஜிபியிடம் புகார் கொடுத்த ஸ்ரீமதி தாய்
வேட்பு மனு தாக்கல்
இதற்கிடையில், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலர் சந்திரசேகரிடம் கள்ளக்குறிச்சி கனியாமூரில் மறைந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மனுதாக்கல் செய்தார்.
அதன்பின் பேட்டியளித்த அவர், “கடந்த இரண்டு வருடங்களாக அளவில்லா கஷ்டத்தை அனுபவித்து வந்ததாலும் சாதாரண மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால் அதிகாரம் கையில் இருக்க வேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற மடிப்பிச்சையாக விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் வாக்குகளை கேட்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.