நடிகர் விஜய் என்றால் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் - மாணவி ஸ்ரீமதி தாய் உருக்கம்
மாணவி ஸ்ரீமதிக்கு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று தாய் உருக்கமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதி பள்ளிக்கூட வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பள்ளிக்கூடத்தில் 3வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பள்ளி நிர்வாகம் கூறினாலும், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் செல்வி தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ம்ற்றும் 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸ் வசம் மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் தாயார் நேரில் சந்தித்து, மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் நீதி வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தார்.
தாய் உருக்கமான பேட்டி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் மாணவியின் தாய் பேசுகையில், என் பொண்ணுக்கு நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். ஸ்ரீமதி விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்யை நாம ஏதாவது ஒண்ணு சொல்லிட்டா போதும். அப்படி கோபம் வரும் அவளுக்கு.
விஜய் பாட்டு வந்தா உடனே எழுந்து டான்ஸ் ஆடுவா… என் மகனுக்கு கூட அவ தான் பெயர் வைத்தாள். அவனுக்கு நான் தாய் இல்லை. அவள்தான் தாயா பார்த்துக்கிட்டா.. ரெண்டு பேருக்கும் சண்டை வந்தா உடனே… டேய்.. உனக்கு நான்தான்டா பெயர் வைத்தேன் என்று சொல்லுவா… என்று உருக்கமாக பேசியுள்ளார்.