அது நடந்தால் 2024ல் இலங்கை தீவே காணாமல் போகும்; சென்னை வரை.. - படையப்பா நடிகர் பரபரப்பு!
2024ம் ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்றும் நடிகர் அனுமோகன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
நடிகர் அனுமோகன்
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகர் அனுமோகன். இவர் 1980களில் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் கொங்கு தமிழில் வசனங்கள் பேசி நடிகராகவும் சினிமாவில் கலக்கியுள்ளார். அர்ச்சனை பூக்கள், விஐபி, நட்புக்காக, மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மைக்காலமாக நடிகர் அனுமோகன், சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார். அதில், "இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10வது உலக கோப்பை. இனி 25க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா வென்று கொண்டே இருக்கும்.
இலங்கை மூழ்கும்
30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள்" என்று கூறினார். ஆனால் இந்தியா உலக கோப்பையில் தோல்வியடைந்தது. இதனால் அனுமோகனை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.
இதேபோல், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் "31.12. 2024க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது.
2004ம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இந்த முறை சுனாமியால் இலங்கை அழியும். மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும்" எனக் கூறி நடிகர் அனுமோகன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இதனை எதிர்பார்த்து நெட்டிசன்களும் காத்திருக்கின்றனர்.