கோவை மக்களே உஷார்.. பரவும் வைரஸ் காய்ச்சல் - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

Tamil nadu Coimbatore Virus
By Jiyath Nov 22, 2023 04:13 AM GMT
Report

கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பரவும் காய்ச்சல்

தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மக்களே உஷார்.. பரவும் வைரஸ் காய்ச்சல் - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்! | Amid Of Flu Virus Infection Coimbatore

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றத்தால் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதால் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும்.

காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும்.

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR விளக்கம்!

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR விளக்கம்!

முகக்கவசம் கட்டாயம்

தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வண்டும். இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

கோவை மக்களே உஷார்.. பரவும் வைரஸ் காய்ச்சல் - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்! | Amid Of Flu Virus Infection Coimbatore

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வரலாமல் தடுக்கலாம்.

மேலும் காய்ச்சல் கண்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். உரிய சிகிச்சை: மாவட்த்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விபரங்களை அரசு, தனியார் மருத்துவனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.