இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR விளக்கம்!

COVID-19 COVID-19 Vaccine India Death
By Jiyath Nov 22, 2023 03:35 AM GMT
Report

இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

திடீர் உயிரிழப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவில் இளம் வயதில் உயிரிழப்பு என்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இளைஞர்கள் பலர் உடற்பயிற்சி கூடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR விளக்கம்! | Vaccination Not Responsible For Death Icmr Study

இதற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு கிடையாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) =விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தனது12 பக்க ஆய்வறிக்கையை தற்போது ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

அதில் "நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 47 பெரிய மருத்துவமனைகளில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 729 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 2,916 பேரிடம் தகவல்கள் கேட்டறியப்பட்டன. கடந்த 2021 அக்டோபர் முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 18-45வயதினரில் திடீரென உயிரிழந்த 29,171 பேரின் மருத்துவ அறிக்கைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

'இந்த தேகம் மறைந்தாலும்' - இறந்தும் ஏழைகளின் மருத்துவக் கடனை அடைத்த பெண்!

'இந்த தேகம் மறைந்தாலும்' - இறந்தும் ஏழைகளின் மருத்துவக் கடனை அடைத்த பெண்!

என்ன காரணம்?

இந்த ஆய்வின்படி, இளைஞர்களின் திடீர் உயிரிழப்புக்கு கரோனா தடுப்பூசி எந்த வகையிலும் காரணம் கிடையாது. 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரிவினரில் உயிரிழப்பு சற்று அதிகமாக இருக்கிறது.

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR விளக்கம்! | Vaccination Not Responsible For Death Icmr Study

இளம் வயது உயிரிழப்புகளில் 10 சதவீதம் பேரின் உயிரிழப்புக்கு குடும்ப பின்னணி முக்கிய காரணமாக உள்ளது. 27 சதவீத உயிரிழப்புக்கு புகையிலை, போதைப் பொருள் பழக்கமும், 27 சதவீத உயிரிழப்புக்கு மது பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் இளம் வயதில் உயிரிழந்துள்ளனர். இவை தவிர உணவு பழக்கம், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆகியவையும் இளம் வயது மரணத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

உயிரிழப்பதற்கு 24 அல்லது 48 மணிநேரம் முன்பு அவர்கள் அதிக அளவில் மது அருந்தியிருக்க வேண்டும். அல்லது அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்களது வாழ்க்கை முறை, குடும்ப உடல்நல வரலாறு ஆகியவையே திடீர் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன" என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.