பாலியல் சர்ச்சை: அஜித், சூர்யா தான் மிஸ்டர் கிளீன்; அப்போ விஜய்..? - பிரபலம் பகீர்!
தமிழ் சினிமாவில் மிஸ்டர் கிளீன் நடிகர்கள் என்றால், அது சிவகுமார், சூர்யா மற்றும் அஜித் தான் என்று பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
பாலியல் சர்ச்சை
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்டெஸ்டன்டாக பங்கேற்றுள்ள நடிகை விசித்ரா ஒரு எப்பிஸோடில் "ஒரு திரைப்படத்தின் போது டாப் ஹீரோ ஒருவர் தன்னை அறைக்கு அழைத்ததாகவும், படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது, ஒரு நபர் தன்மீது தகாத முறையில் கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து ஸ்டன்ட் மாஸ்டரிடம் தெரிவித்தபோது அவர் தன்னை அறைந்து விட்டதாகவும் விசித்ரா பேசினார். இந்த பாலியல் தொல்லை விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "விசித்ரா பேசியது யதார்த்தம் தான்.
பிஸ்மி பேட்டி
ஆனால் அவர் தமிழ் சினிமாவை குறிப்பிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்த மிஸ்டர் கிளீன் நடிகர் சிவகுமார் தான். தற்போது அவரது மகன் சூர்யா. அஜித்தும் பக்காவான மனிதர்’ என்றார் பிஸ்மி.
அப்போது அவரிடம் "சமீபத்தில் ஜோதிகா அளித்த பேட்டியில் மாதவன், சூர்யா, அஜித் ஆகியோருடன் நடிக்கும்போது மட்டும்தான், தான் மிக கம்ஃபர்ட்டாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளாரே..? என செய்தியாளர் பிஸ்மியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர் "இதன் பொருள் விஜய்யுடன் நடிக்கும்போது கூட தான் அப்படி இல்லை என்பது தான். அதை அப்படிதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்’என பிஸ்மி பேசியுள்ளார். இது தற்போது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.