கிரிக்கெட் விளையாடினால் ரோகித் மயங்கி விழுவார்; யூ டர்ன் போடும் கம்பீர் - ஸ்ரீகாந்த்!
ரோகித் சர்மா விளையாடினால் களத்திலே மயங்கி விழுந்து விடுவார் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கம்பீர் யூ டர்ன்
இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டது குறித்தும், ரோகித் விராட் கோலி குறித்து பேசியது பற்றியும் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அவர் பேசியதாவது, கவுதம் கம்பீர் ஏன் இப்படி அடிக்கடி மாற்றி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் இருவருக்கும் எனது அணியில் இடம் இருக்காது.
தற்போது பதவி ஏற்ற பிறகு திடீரென்று கம்பீர் யூ டர்ன் போட்டு இருக்கிறார். விராட் கோலி ரோகித் சர்மாவும் போல் எந்த ஒரு வீரரும் கிடையாது. பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு ரோகித்தும், கோலியும் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகள் எஞ்சி இருக்கின்றது.
ஸ்ரீகாந்த் கருத்து
இருவரும் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையில் உடல் தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள். ரோகித் சர்மா உண்மையிலே நல்ல வீரர் தான். ஆனால் அவருக்கு இப்போதே வயது 37 ஆகிவிட்டது. அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.
அப்போது ரோகித் சர்மாவுக்கு வயது 40 ஆக்கிவிடும். தோனி, சச்சின் போல் உங்களுக்கு நல்ல உடல் தகுதி இருந்தால் நிச்சயம் நீங்கள் விளையாடலாம். ஆனால் அப்படி இல்லை என்றால் 40 வயதில் உலகக் கோப்பை விளையாடுவது என்பது சரி கிடையாது. ஆனால் விராட் கோலிக்கு அந்த சிக்கல் கிடையாது.
அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும் ரோகித்தை விட இரண்டு வயது குறைவு. இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையை விளையாடலாம்.
ஆனால் ரோகித்தை பொருத்தவரை கம்பீர் கொஞ்சம் அதிகமாகவே கணித்து விட்டார் என்று நினைக்கின்றேன். தென்னாப்பிரிக்காவில் ரோகித் சர்மா 40 வயதில் விளையாடினால் மயக்கம் போட்டு களத்தில் விழுந்து விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
