ரஜினிகாந்த்துக்காக 7 நாட்கள் விரதம் இருந்த ஸ்ரீதேவி - ஏன் தெரியுமா?
ரஜினிக்காக ஸ்ரீதேவி ஏழு நாட்கள் விரதம் இருந்த விஷயம் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ரஜினிகாந்த் அடிவயிற்று ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விரதம் இருந்த ஸ்ரீதேவி
இந்நிலையில், ரஜினிக்காக ஸ்ரீதேவி விரதம் இருந்த சம்பவம் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் ராணா படத்தில் நடித்தபோது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகியுள்ளது.

தனையடுத்து சென்னையில் சிகிச்சை திருப்தி அளிக்காததால் அவர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் நாடு திரும்பினார். அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல்நிலையை கேள்விப்பட்ட ஸ்ரீதேவி, அவர் விரைவில் பூரண நலமடைய வேண்டும் என ஷீரடி சாய்ப்பாபாவுக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
புனேவில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகளையும் செய்துள்ளார். ரஜினியும் ஸ்ரீதேவியும் இணைந்து போக்கிரி ராஜா, நான் அடிமை இல்லை, மூன்று முடிச்சு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil