Sunday, Jul 20, 2025

ஹனிமூனில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்; வேறு அறைக்கு சென்ற மனைவி - போட்டுடைத்த பிரபலம்

Rahman Tamil Cinema A R Rahman Tamil Actors
By Karthikraja 9 months ago
Report

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவரது உறவினரும் நடிகருமான ரகுமான் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். 

ar rahman oscar

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரியைதான் நடிகர் ரகுமான் திருமண, செய்துள்ளார். ரகுமான் நடித்த சங்கமம் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டானது.

நடிகர் ரகுமான்

இந்நிலையில் தனது உறவினரான ஏ.ஆர்.ரஹ்மானின் ஹனிமூன் பற்றிய சுவாரசிய தகவலை நடிகர் ரகுமான் பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரகுமான், "நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் எதிர் எதிர் துருவங்கள். அவர் மிகவும் அமைதியானவர். தொழில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். 

நடிகர் ரகுமான்

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அவர் திருமணம் ஆனவுடன், என் அண்ணியை ஒரு மலைப்பகுதிக்கு ஹனிமூன் அழைத்துச் சென்றார். அன்று இரவு 12 மணியளவில் நான் அவர்களை போனில் அழைத்தேன்.

ஹனிமூனில் இசை

போனை எடுத்த எனது அண்ணி தூங்கி கொண்டிருப்பதாக சொன்னார். அப்போது ‘ரஹ்மான் எங்கே’ என்று கேட்டதற்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று சொன்னார். அப்போது ரஹ்மான் வேறொரு அறையில் வீணையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு படத்திற்காக இசையமைத்துக் கொண்டிருந்தார். 

ar rahaman wife honeymoon

அவர் அப்படிப்பட்ட நபர். எப்போதும் ரஹ்மான் தனியாக இருக்க விரும்புகிறவர். அவர் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஆன்மீகத்தை தழுவுவது, இஸ்லாத்திற்கு மாறுவது பற்றியெல்லாம் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்" என பேசினார்.