என் ஆசையே வேற; கடனால்தான் சினிமாவுக்கு வந்தேன் - நடிகர் சூர்யா
சினிமாவில் நடிக்க ஆசை எனக்கு இருந்ததில்லை என சூர்யா பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா, மேற்குக்குநேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தான் நடிகரானது குறித்து கங்குவா பட ப்ரோமோஷன் நிகழ்வில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.750 சம்பளம்
இதில் பேசிய அவர், "நான் ஒரு கார்மெண்ட்ஸ் தொழிலில் வேலை செய்து கொண்டிருந்தேன், முதல் 15 நாட்கள் நான் ஒரு பயிற்சியாளராக ரூ.750 சம்பளம் வாங்கினேன். முதல் 6 மாதங்களுக்கு நான் ஒரு நடிகரின் மகன் என்பதே அவர்களுக்குத் தெரியாது.
அப்போது எனது மாதச் சம்பளம் ரூ.1,200. நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள் வேலை செய்தேன். இதற்குள் எனது சம்பளம் 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. நான் சொந்தமாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்க விரும்பினேன். அதற்கான அனுபவத்தைப் பெறுவதற்காகதான் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அம்மா அப்பாவிற்கு தெரியாமல் ரூ.25,000 கடன் வங்கியிருப்பதாக கூறினார். பேங்க் பேலன்ஸ் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்ததில்லை. அப்பா எப்போதும் அவரது சம்பளத்தைக் கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் தருகிற வரை அவர் காத்திருப்பார்.
கடனுக்காக சினிமா
கிட்டத்தட்ட 10 மாதங்கள் அப்பா படம் இல்லாமல் இருந்தார். சிவகுமாரின் மகனாக எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. நிறைய சலுகைகள் கிடைத்தன. ஆனால், நான் ஒருபோதும் திரைப்படத் துறையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.
அம்மா 25,000 ரூபாய் கொடுக்க சிரமப்படுவதைப் பார்த்தபோது, அது என்னை மிகவும் பாதித்தது. அம்மாவின் கடனை அடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இத்துறையில் நுழைந்தேன். அப்படித்தான் என் வாழ்க்கையை ஆரம்பித்து சூர்யா ஆனேன்.
நேருக்கு நேர்
நேருக்கு நேர் படத்திற்கு நல்ல நடிகரை மணிரத்னம் தேடினார். நான் சரியாக இருப்பேன் என கருதி என்ன அணுகினார். நான் எனது முதல் ஷாட்டை நடித்தபோது, செட் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் நின்றார்கள், நான் யார் என்று அவர்களுக்குத் தெரியாது.
ஆனால், என் ஷாட்டுக்குப் பிறகு, அவர்கள் கூச்சலிடுவதையும் கைதட்டுவதையும் நான் கேட்டேன். அதன் பிறகு, தலைமுறைகள் மாறின, பார்வையாளர்கள் மாறினர், ஆனால், நான் நிபந்தனையற்ற அன்பைப் பெறுகிறேன். அதனால், அவர்களுக்காகவே நான் தொடர்ந்து படங்களில் நடித்தேன்" என பேசியுள்ளார்.