இலங்கை அதிபர் தேர்தல் -வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நாமல் ராஜபக்சே குடும்பம்!
நாமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் உள்பட அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் தேர்தல்
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் 225 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர்.
நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு அமைதியாக முறையில் நடந்து முடிந்தது. இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரமதாசா, என்பிபி அநுர குமார திசநாயக்க, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, சார்பில் நுவான் போபகே உள்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 52.67% வாக்குகளைப் பெற்று அநுர குமார திசநாயக்க முன்னிலையில் உள்ளார் .பொதுவாக இலங்கை அதிபராக 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் இவர் 52.67 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டதால் இவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
நாமல் ராஜபக்சே
தற்போது 03:00 மணி நிலவரப்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கே 17.87% வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தார். இதேபோல் சஜித் பிரேமதாஸா 33.87% வாக்குகள் பெற்று பின்னடைவடைந்தார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் 2.43%வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
இதனையடுத்து நாமல் ராஜபக்சே தோல்வியடைந்து விட்டதால், ரமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அநுர குமார திசநாயக்க பிரசாரத்தின் போது ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.