இலங்கையின் புதிய அதிபர் -யார் இந்த அனுர குமார திசநாயக்க?

World Srilankan Tamil News Sri Lanka election updates
By Vidhya Senthil Sep 22, 2024 05:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இலங்கை
Report

  இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது  அனுர குமார திசநாயக்கக்கு பெரியளவிலான ஆதரவு அளிக்கப்பட்டது.

இலங்கை 

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அதிபராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. யார் இந்த அனுர குமார திசநாயக்க என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

srilanka

அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர்; இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர் அனுர குமார திசநாயக்கன்.

1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார் 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார்;

ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் - இலங்கை தேர்தலின் நடைமுறை!

ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் - இலங்கை தேர்தலின் நடைமுறை!

கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார் .16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் தவிப்பின் போது சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என முழக்கத்தை அழுத்தமாக சொன்னார்.

 அனுர குமார திசநாயக்க

இதனால்   இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது ஏகேடிக்கு பெரியளவிலான ஆதரவு அளிக்கப்பட்டது.

srilanka election

தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக  அனுர குமார திசநாயக்க  உள்ளார்; இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அனுர குமாரவுக்கு அமோக ஆதரவு உண்டு.

   மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு: இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.