8 ஆண்டுகள் பிறகு..வெளியே வந்த பனிக்கரடி ; சுட்டு கொன்ற போலீஸ் - என்ன காரணம்?

Iceland World
By Swetha Sep 21, 2024 03:30 PM GMT
Report

8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை போலீசார் சுட்டு கொன்றனர்.

பனிக்கரடி

ஐஸ்லாந்து நாட்டில் பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

8 ஆண்டுகள் பிறகு..வெளியே வந்த பனிக்கரடி ; சுட்டு கொன்ற போலீஸ் - என்ன காரணம்? | Polar Bear That Came After 8 Yr Got Shot By Police

இதன் காரணமாக 8 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை போலீசார் சுட்டு கொன்றதாக விளக்கம் அளித்தனர்.

கரடிகளை அழித்தால் மானியமா? அதிரடியாக அறிவித்த அரசு!

கரடிகளை அழித்தால் மானியமா? அதிரடியாக அறிவித்த அரசு!

என்ன காரணம்?

பனிக்கரடிகள் ஐஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன. கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.

8 ஆண்டுகள் பிறகு..வெளியே வந்த பனிக்கரடி ; சுட்டு கொன்ற போலீஸ் - என்ன காரணம்? | Polar Bear That Came After 8 Yr Got Shot By Police

முன்னதாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்தில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை ஐஸ்லாந்தில் 600 பனிக்கரடிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.