கரடிகளை அழித்தால் மானியமா? அதிரடியாக அறிவித்த அரசு!
வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
கரடிகளை அழித்தல்
மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை வேட்டையாட ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில்' அவை சேர்க்கப்படவில்லை.
மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. அண்மை காலமாக கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அறிவித்த அரசு
ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் பழுப்பு நிற கரடிகள் ஹொக்கைடோவில் வாழ்கின்றன. அதேபோல் சுகினோவாகுமா எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன.
இதையடுத்து, இலையுதிர் காலத்தில் கரடிகளை அழிப்பதற்காக அரசு மானியங்களை வழங்க தொடங்கும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் பலியாகினர்.இது 2006ல் பதிவான கரடி தாக்குதல்களை விடவும் தற்போது அதிக பட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.