மரத்தில் சிக்கி தவித்த கரடி - லாவகமாக மீட்பு

rescue bear covai valparai
By Anupriyamkumaresan Aug 24, 2021 04:11 AM GMT
Report

கோவை மாவட்டம் வால்பாறையில் மரத்தில் சிக்கிக்கொண்டு வலியால் துடித்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி மீட்டனர். தேயிலை தோட்டத்தில் மரத்தில் இருந்து கரடி ஒன்று தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பியுள்ளது.

மரத்தில் சிக்கி தவித்த கரடி - லாவகமாக மீட்பு | Bear Struck In Tree Forest Officer Rescued

இதனை கேட்டு கரடியை நோக்கி வனத்துறையினர் விரைந்தனர். அப்போது அந்த கரடியின் கை மரக்கிளையில் சிக்கி இறங்க முடியாமல் வலியால் தவித்து கொண்டிருந்தது.

மரத்தில் சிக்கி தவித்த கரடி - லாவகமாக மீட்பு | Bear Struck In Tree Forest Officer Rescued

இதனை தொடர்ந்து மரத்தை அடிப்பகுதியை வெட்டி சாய்த்த வனத்துறையினர், கரடிக்கு மயக்க மருந்து செலுத்தி லாவகமாக மீட்டனர். இதையடுத்து காயமடைந்த கரடிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.