திடீரென பாய்ந்த மின்னல்..மைதானத்தில் கால்பந்து வீரர்களுக்கு நேர்ந்த கொடூரம்!
கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்து வீரர்
பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் 2 தினங்களுக்கு முன்பு உள்ளூர் கால்பந்துப் போட்டி நடைபெற்றது.இதில் ஜுவன்டெட் பெல்லாவிஸ்டா, ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகள் மோதின. ஆனால் மோசமான வானிலை காரணமாக கால்பந்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து விளையாட்டு வீரர்களை மைதானத்திலிருந்து வெளியே உத்தரவிடப்பட்டது. அப்போது திடீரென மின்னல் தாக்கியது.இதில் 39 வயதான ஹியூகோ டீ லா கர்ஸ் மேசா என்ற ஃபெமிலியா சோக்கா அணி வீரர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
வீடியோ
மேலும் மைதானத்தில் அவருடன் விளையாடிய வீரர்கள் 5 பேரும் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கியதை மைதானத்திலிருந்த சில ரசிகர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.