கிச்சடியில் உள்ள ஆன்மிக காரணங்கள் - இது தெரியாம போச்சே!
கிச்சடியில் உள்ள பொருட்கள், குறிப்பாக உளுந்து மற்றும் அரிசி ஆகியவை சனியின் ஆற்றலுடன் தொடர்புடையவை.
கிச்சடி
நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் சாதம் , சாம்பார் ,கீரை வகைகள் , காய்கறிகள் எடுத்து கொள்வோம். அதில் மாறுபட்டு அரிசி மற்றும் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் எளிமையான மற்றும் சத்தான உணவு கிச்சடி தான் .
இது இந்திய உணவு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது மட்டுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய உணவு ஆகும்.
தேவையான பொருள்கள்
எண்ணெய் -2 டீஸ்பூன்
ரவை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 20 கிராம்
பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி
கேரட் - 1 (சிறியது) இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 2 [பாட்டி மசாலா]
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
கிச்சடி செய்முறை
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் ரவையை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும். அதன் பிறகு எனஎண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றி கடுகு ,உளுந்து ,கடலைப் பருப்பு ,சீரகம் ,முந்திரி ,பெருங்காயம், கிராம்பு ,பிரிஞ்சி இலை,கறிவேப்பிலை, சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டே கால் பங்கு என தண்ணீர் விட்டு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும். கொதி வந்ததும் ரவையை போட்டுக் கிளறவும். அது பாதி வெந்து வரும்போது நெய் ஊற்றி கிளறி விடவேண்டும் .
பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும். சூப்பரான ரவை கிச்சடி ரெடி. ஆன்மீக முக்கியத்துவம் ஆன்மிக நடைமுறையில் சனிக்கிழமைகள் சனி கிரகத்துடன் தொடர்புடைய தெய்வமான சனி கடவுளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
சனி, நீதியின் கடவுளாக உள்ளார். பக்தர்கள் தங்கள் ஜோதிட ரீதியாக சனியின் தீய விளைவுகளைத் தணிக்க அவருடைய ஆசீர்வாதத்தை நாடுகிறார்கள். சனிக்கிழமைகளில் கிச்சடியை வழங்குவதும், உட்கொள்வதும் சனி தேவனை சமாதானப்படுத்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
இது எளிமை, பணிவு, பாதுகாப்பு மற்றும் கருணைக்கான விருப்பத்தை குறிக்கிறது.
கிச்சடியில் உள்ள பொருட்கள், குறிப்பாக உளுந்து மற்றும் அரிசி ஆகியவை சனியின் ஆற்றலுடன் தொடர்புடையவை.
இந்த பொருட்களை உட்கொள்வது சனியின் நேர்மறையான செல்வாக்கை வலுப்படுத்துவதோடு அதன் எதிர்மறை தாக்கங்களைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.