காலை சிற்றுண்டி; இனி 4 வகையான உணவு - அரசு அதிரடி!

M K Stalin Tamil nadu
By Sumathi Jun 27, 2023 07:54 AM GMT
Report

காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி

தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காலை சிற்றுண்டி; இனி 4 வகையான உணவு - அரசு அதிரடி! | Breakfast Program Meal List Modification

இதற்காக தற்போதைக்கு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய உணவு பட்டியல்

அதன்படி, திங்கட்கிழமை ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா

செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி

புதன்கிழமை, காய்கறி சம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்

வியாழக்கிழமை, காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை உப்புமா

வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.