ரவா கிச்சடி உணவு; தகவல் தொடர்புக்கு வாக்கி-டாக்கி - 41 பேரின் தற்போதைய நிலைமை என்ன?

Uttarakhand Accident
By Sumathi Nov 21, 2023 03:57 AM GMT
Report

இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாக சூடான உணவு வழங்கப்பட்டுள்ளது.

சூடான உணவு 

உத்தரகாண்ட், யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

khichdi-food-for-workers

அதில், 40 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

சுரங்கப்பாதை விபத்து; 40 பேரின் கதி என்ன? ஆய்வுப்பணி தீவிரம்!

சுரங்கப்பாதை விபத்து; 40 பேரின் கதி என்ன? ஆய்வுப்பணி தீவிரம்!

41 பேரின் நிலை

குழாய்கள் மூலம் சுரங்கத்தில் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூடான ரவா கிச்சடி, பால், குழைவான பருப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கியும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தி அறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.... மீட்புப் பணிகளை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.