சுரங்கப்பாதை விபத்து; 40 பேரின் கதி என்ன? ஆய்வுப்பணி தீவிரம்!
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் 3வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
சுரங்கப்பாதை விபத்து
உத்தரகாண்ட், உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள யமுனோத்ரியில் சார் தாம் என்ற சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களாக பணிகள் நடந்து வருகின்றன. திடீரென இந்த சுரங்கபாதையில் பெரும் விபத்து ஏற்பட்டது.
சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே உடைந்து மூடிக் கொண்டுள்ளது. நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தூரத்தில் சுரங்கத்தின் 30 மீட்டர் நீளப் பாதை உடைந்து விழுந்தது. இதில் மொத்தமாக 40 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
40 பேரின் கதி?
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ - திபெத் எல்லை போலீசார், எல்லையோர சாலைகள் அமைப்பினர் என 150க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, நிபுணர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சிறப்புக் குழு சுரங்கப்பாதை மற்றும் அதற்குமேல் உள்ள மலைப்பகுதியை ஆய்வு செய்து வருகிறது.