2 நாளாக தொடரும் மீட்புப்பணி..!! பைப் வழியாக சாப்பாடு, ஆக்ஸிஜன் வழங்க முயற்சி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை 2-வது நாளாக மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
நிலச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள யமுனோத்ரியில் சார் தாம் என்ற சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களாக பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை சில்க்யாரா இந்த சுரங்கபாதையில் பெரும் விபத்து ஏற்பட்டது.
சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே உடைந்து மூடிக் கொண்டுள்ளது. நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தூரத்தில் சுரங்கத்தின் 30 மீட்டர் நீளப் பாதை உடைந்து விழுந்தது. இதில் மொத்தமாக 40 பேர் சிக்கியுள்ளனர். நேற்று முதல் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ - திபெத் எல்லை போலீசார், எல்லையோர சாலைகள் அமைப்பினர் என 150க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்தின் உள்ளே தொழிலாளர்கள் மூச்சு விடும் வகையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. பைப்கள் மூலம் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை சுரங்கத்தின் உள்ளே தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Uttarakhand | On Uttarkashi Tunnel accident, Prashant Kumar, Circle Officer of Uttarkashi says, "40 people are trapped inside the tunnel. All are safe, we have provided oxygen and water to them..."
— ANI (@ANI) November 13, 2023
"The present situation is, that yesterday we established communication… pic.twitter.com/KWBVtN0ks8
இந்நிலையில், மீட்புப்பணிகள் குறித்து பேசிய உத்தர்காஷி சர்க்கிள் ஆபிசர் பிரசாந்த் குமார், 15 மீட்டர் தூரத்திற்கு முன்னே நகர்ந்துள்ளோம் என குறிப்பிட்டு, இன்னும் 35 மீட்டர் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர், விரைவில் மீட்டு விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.