திடீரென இடிந்து விழுந்த தங்க சுரங்கம் - 7 பேர் பரிதாப பலி!

Africa Death
By Vinothini May 18, 2023 08:20 AM GMT
Report

ஆப்ரிக்கா தங்க சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தங்க சுரங்கம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன.

africa-gold-mine-landslide-7-people-died

இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றது, அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள்.

இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

உயிரிழப்பு

இந்நிலையில், கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

africa-gold-mine-landslide-7-people-died

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது.

இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனால் இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும், இதல் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.