நெல்லை பயணிகளுக்கு குட்நியூஸ்; சிறப்பு ரயில் அறிவிப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
நெல்லை-சென்னை
சென்னையில் இருக்கும் வெளி மாவட்ட மக்கள் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாளையொட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06183 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 11.20 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில்
இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வரும். எழும்பூரில் இருந்து 12.10 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் 16 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும், இரண்டு சாதாரண பெட்டிகளும், லக்கேஜ் ரயில் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் (ஜூலை 18, 2024) முதல் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு பயணத்தை தொடங்கி, மறுநாள் இரவு 11 மணிக்கு ஷாலிமரை சென்றடையும்.
தொடர்ந்து மறுமார்க்கமாக ஷாலிமரில் இருந்து ஜூலை 20 மற்றும் 27ஆம் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் 1.15 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் ஜூலை 25ஆம் தேதியும் இயக்கப்படவுள்ளது.