தமிழக சட்டப்பேரவை கேள்வி கேட்ட சபாநாயகர் - ஷாக்கான முதல்வர், அமைச்சர் துரைமுருகன்!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகின்றது.
தமிழக சட்டப்பேரவை
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் மரணங்கள் தமிழகத்தை அதிரவைத்து வரும் நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியுள்ளது. பேரவை துவங்கிய உடனேயே எதிர்க்கட்சியான அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டார்கள்.
அதன் காரணமாக, சபாநாயகர் அப்பாவு'வின் உத்தரவின் அவர்கள் அவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்கள். கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களையும் அவைக்கு அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு சபாநாயகருக்கு இணங்கினார். அதனை தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்னதாக பாமக மற்றும் பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
கேள்வி கேட்ட அப்பாவு
கேள்வி நேரத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தனக்கும் ஒரு கேள்வி இருப்பதாக குறிப்பிட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் உங்கள் முதல்வர் என்ற திட்டத்தில் திசையன்விளை தாலுகா முனிசீப் கம் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளீர்கள்.
எப்போது ஆரம்பிக்கப்படும்? என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்கும் புதுமையை இப்பொது தான் நான் பார்க்கிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, எனக்கு மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். நானும் தொகுதிக்கு கேட்கணும்'ல என்றார் சிரித்து கொண்டே.