அதிரும் சட்டப்பேரவை - அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்...குண்டுக்கட்டாக அவையில் இருந்து நீக்கம்!!

Government of Tamil Nadu ADMK DMK
By Karthick Jun 21, 2024 05:36 AM GMT
Report

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, அதிமுகவினர் கடும் அமளியில் சட்டப்பேரவை வளாகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழக அரசியல் களம்

கள்ளக்குறிச்சி மரணம் தான் தற்போது தமிழக அரசியலில் பெறும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகின்றது. இப்பொது வரை 49 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கும் நிலையில், இன்னும் பலி எண்ணிக்கை கூடுமோ என்ற அச்சம் எழுகிறது.

Kallakurichi issue

அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், சில திரை பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை தருவதாக அறிவித்துள்ளது.

விஷச்சாராய விவகாரம்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

விஷச்சாராய விவகாரம்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

அமளி

இந்நிலையில் தான் தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் பெரும் சலசலப்புகளை உண்டாக்கி இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

admk mla

அவர்கள் அமைதி காக்காத நிலையில், அதிமுக உறுப்பினரான திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் குண்டுக்கட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நேற்று விஷச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.